Monday 14 April 2014

4.ஈ - நாலு வரி கவிதை



மீனா இஸ் மை லவ்வர். அவ சிரிச்சா பல்லு எல்லாம் ஈ !

என் காதல் பாத்திரத்தில் பிச்சை போடுமா அவள் மனதின் ஈ ?

எங்க ஏரியாவுல ஓடுது சாக்கடை. அது ஃபுல்லா ஈ

நாலாவது வரியின் கடை எழுத்து இஸ் ஆல்சோ ஈ

Saturday 12 April 2014

3. இட்லி! தொட்டுக்க நோ சட்னி

என்ன மீனா பார்த்தும் பார்க்காத மாதிரி அவாய்ட் செய்த செயல் என் ஹார்டை உடைத்தது. கண்களில் கண்ணீர் தேங்கினது. சத்தம் போட்டு அழலாம் என்று கூட நினைத்தேன் . ஆம்பள  அழ கூடாதுடா என்று என் பாட்டி சொன்னது  நியாபகத்துக்கு வந்துச்சு. ஆனாலும் என்னால கண்ட்றோல் செய்ய முடியல. அதே நேரத்தில யூரினும் அடக்க முடியாம வந்திச்சு.  ஒரு பப்லிக் டாய்லட் க்ண்ணுக்கு எட்டின தூரத்தில் தெரிந்தது. ஓடி போனேன். ஐம்பது பைசா கொடுத்து விட்டு என்ட்ரி கொடுத்தேன். ஓ என்று அழுதேன். அழுது கொண்டே ரிலீசும் செய்தேன். யேஸ்  ஐ வாஸ் மல்டி டாஸ்க்கிங்.

ஆஃப்டர் சம் டைம் பசி வயத்த போட்டு ஒரு பொரட்டு  பொரட்டுச்சு. பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டலுக்குள்ள போனேன். என் பாக்கெட்டுல 4 ரூபாய். அத வச்சு ஒன்னும் வாங்க முடியல. இரண்டு இட்லி மட்டும் கிடச்சுச்சு. . ஊருல இருந்துருந்தா ராசா போல எங்க அம்மா கவனிச்சிருப்பாங்க். ஆனா இந்த பாழா போன லவ் என்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்துடுச்சு. இட்லி கொஞ்சம் புளிச்ச ஸ்மேல். பட் தட்  வாஸ் ஓகே. பீகாஸ் என்னோட லவ் புளிச்சு போன அளவுக்கு இட்லி புளிக்கல. சட்னியும் ஓவெர். கொஞ்சம் சட்னி தாங்கனு கேட்டேன்  ப்ட் தொட்டுக்க சட்னி கூட கிடைக்கல. சட்னி கிடைக்காத அவமானத்த தாங்க முடியாம த்ற்கொலை பண்ணிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

தென் ஸ் ற் ம் காலேஜுக்கு ஆப்போசிட்ல இருக்குற ரேல்வே ஸ்டேஷனுக்கு போனேன். தணட் வாளத்துல ஏன்னோட ஹெட் .. தென் வாட் ஹாப்பேண்ட்?

வண்டவாளம் தண்டவாளத்தில் என்ன ஆனது? அடுத்த போஸ்ட்ல மீட் பண்ணலாம்

Wednesday 2 April 2014

2.ஆப்பு கொடுத்த மீனா

மெட்ராசுக்கு வந்த மீனா எப்படி இருப்பாளோ என்று நான் தின்க் பண்ணி கொண்டிருந்தேன். மீனா என்று சொன்னவுடன் எனக்கு நடிகை மீனாதான் மைன்ட்ல வருவாங்க. அழகான கண். அந்த கண்களை பார்த்து கொண்டே இருக்கலாம். நேர்த்தியான மூக்கு, ஆப்பில் கன்னம், செர்ரி பழம் உதடு, சுண்டீ வீட்டா எலுமிச்சை பழம் நிறம். மொத்ததுல சூப்பர் பிகர். கணபதி ஐயர் மனைவிக்குள்ள எல்லா பொருத்தமும் மீனாவுக்கு உண்டு.

ரெட்ட ஜடை போட்டுக்கினு அப்படியே நடந்து வரும்போது என்னுடைய ஹார்ட் ரெம்ப ஃபாஸ்டா அடிக்கும். ஒரு மயில் மாதிரி இருப்பா அவ. அவ தாவனி கட்டிக்கிட்டு நடக்கும் போது என்னுடைய நாடி நரம்பு எல்லாம் அடங்கி தண்ணியில பதத்து போன பக்கோடா மாதிரி ஸாஃப்டா ஆயிடும். ஊருல இருக்கும் போது நாந்தே பசங்க கூட்டத்துல பாக்குறதுக்கு நல்ல இருப்பேன். அதனால, அவ என்ன பாத்து லைட்டா சிரிப்பா. அப்போ மனசுக்குள்ள சிட்டுக்குறுவி எல்லாம் பறக்கும்.

மேட்ராசுக்கு வந்த உடனே நானும் மீனாவ பாக்குறதுக்கு அவ காலேஜுக்கு போனேன். இம்மா பெரிய காலேஜு அது. எம்புட்டு பிகருக. எல்லாரும் ஜீன்ஸ் டீ சர்ட் போட்டுகினு இருந்தாய்ங்க. மீனாவும் ஜீன்ஸ் டீசர்ட் போட்டுகினு நடந்து வந்தா. அழகோ அழகு. என்ன பாத்ததும் என்ன சொல்லுவாளோனு நானும் வெயிட் செய்தேன். ஆனா அவ என்ன பார்த்தும் பார்க்காதது போல் நடந்து போனா. அதுதான் மீனா எனக்கு கொடுத்த முதல் ஆப்பு. அப்பவே நான் முழிச்சிருக்கனும்.. ஆனா...

- ஆப்புகள் தொடரும்

Thursday 27 March 2014

1. அழகு மயில் மீனா


எனக்கு சொந்த ஊரு அலங்காநல்லூர் . எங்க ஊரு ஜல்லிகட்டுக்கு  ரொம்ப பேமஸ். நானும் வர்ஷா வர்ஷம் போட்டியில கலந்துக்கணும்னு ஆச படுவேன் . ஆனா மாடு முட்டி படாத இடத்துல பட்டு என்னுடைய எதிர்கால சந்ததி உருவாகாம போயிடுமோனு ஒரு பயம் இருந்ததால வேடிக்கை மட்டும் பார்ப்பேன். 

எங்க ஊருல மீனான்னு ஒரு பொண்ணு இருந்தா. அவ ரொம்ப அழகா இருப்பா. அவனா எனக்கு உசுரு . அவளுக்காக நான் கவிதை எல்லாம் எழுதிருக்கேன். ஆனா அவ என்ன கண்டுக்க கூட மாட்டா . படிப்பு முடிஞ்சதும் அவ நல்ல படிச்சதால அவ மெட்ராசுக்கு போயிட்டா . நானும் அங்க போகணும்னு ஆச பட்டேன். ஆனா பிளஸ் டூ வரைக்கும் தான் நான் படிச்சதால அந்த ஊருக்கு போயி என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியல. பட் ஐ வாஸ் ட்றுலி , மேட்லி , டிப்லி இன் காதல் வித் ஹேர். சோ நானும் சென்னைக்கு போனேன்.

அங்க எல்லாமே புதுசா இருந்துச்சு எனக்கு. திரிப்ளிகேன்ல ஒரு மேன்ஷன்ல ரூம் எடுத்து தங்குனேன் . அவ மெட்ராஸ்ல எஸ். ர் . எம்  காலேஜ்ல பெரிய படிப்பு படிச்சுட்டு இருந்தா. எங்க ஊருல இருந்த வரைக்கும் பாவாட தாவணி போட்டுகினு சுத்திகினு இருந்த பொண்ணு மெட்ராஸ் வந்த உடன ஜீன்ஸ் டீ ஷர்ட்னு  போட ஆரம்பிச்சுட்டா. 

ஒரு நாள் அவள பாக்குறதுக்கு அவ காலேஜூ க்கு  போனேன் .. அங்க  என்ன நடந்ததுனா...

... தொடரும்  (நாங்களும் மெகா சீரியல் பாப்போம்ல )

-  பிச்சுவா பக்கிரி.